technology

img

கூகுள் தேடுதல் இணையதளத்துக்கு இன்று 23-வது பிறந்த நாள்....  

தில்லி 
தெரியாத விஷயமோ, தெரிந்த விளக்கம் அறியாத விஷயமோ எதுவாக இருந்தாலும் நாம் அதை அறிந்து கொள்ள முதலில் தேடுவது கூகுள் எனப்படும் தேடுதல் இணையதளத்தை தான். 

இந்த தேடுதல் இணையதளத்துக்கு இன்று 23-வது பிறந்த நாள் ஆகும்.செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் இணைந்து ஆகியோரின் மாறுபட்ட சிந்தனையால் 1997-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூகுள் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் பின்பு  இதே நாளான செப்டம்பர் 27-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டது.

தற்போது உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறியாக  இருக்கும் இந்த நிறுவனத்தை தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புடன் கவனித்து வருகிறார்.

இந்த தினத்தை கூகுளின் டூடுல் கேக் போன்ற அனிமேசன் டிசைனிங் செய்து கொண்டாடியுள்ளது.நெட்டிசன்கள் மற்றும் இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் செய்து கூகுளின் பிறந்த நாளை கொண்டாய் வருகின்றனர்.  

;